இப்படி செய்தால் எங்க கட்சிக்கு ஓட்டு கிடைக்காது.. நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 8:49 pm

இப்படி செய்தால் எங்க கட்சிக்கு ஓட்டு கிடைக்காது.. நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

முன்பு கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வந்த சீமான், மைக் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டியுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னத்தை கொடுத்துவிட்டு, ஸ்விட்ச் இருக்கும் மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ