40 தொகுதிகளிலும் வென்றால் நாம் கைக்காட்டுபவர்தான் பிரதமர் : மா.செ கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2023, 2:17 pm

40 தொகுதிகளிலும் வென்றால் நாம் கைக்காட்டுபவர்தான் பிரதமர் : மா.செ கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

செல்லும் இடங்களில் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன் இனி எக்காலத்திலும் மகளிரின் வாக்குகள் நமக்குதான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை யார் வெற்றி பெறுவாரோ அவரை வேட்பாளராக இருப்பார்.

இவர் தான் இந்த தொகுதிக்கு வேட்பாளர் என்று எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தலைமை பார்த்துக் கொள்ளும் என தெரிவித்தார்.

சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளிடம் பேசிய திமுக அமைச்சர் கே.என்.நேரு எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயார்.

சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. சேலம் மாநாடு வெற்றிகரமான மாநாடாக அமையும் என தெரிவித்தார். சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu