மே 18ம் தேதி நாளை நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு தூத்துக்குடி மாநகரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக நேற்று சென்னையிலிருக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்த அவர், தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள தனியார் ரெசார்ட்ஸில் தங்கியுள்ளார். இந்நிலையில், அவர், இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த நூற்றாண்டில் எங்கும் நடக்காத இனப்படுகொலை மே 18 நடத்தது. இந்த இனப்படுகொலையை உலகமெங்கும் தமிழக மக்கள் அனுசரிக்கின்றோம். இன எழுச்சி நாளாக கருதி எழுச்சி கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றோம். இதன் காரணமாக 2018 மே 18 நாம் தமிழர் கட்சி என்ற இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது.
எங்களுடைய உணர்வை, எங்களுடைய வேலை திட்டங்களை இருமடங்காக உயர்த்தி கொள்வதற்கு அறிய வாய்ப்பாக மே 18ம் தேதி நாளை இந்நாளை பார்க்கிறோம் என்ற அவர்,
தமிழக அரசு இரண்டாண்டு சாதனை குறித்த கேள்விக்கு? தமிழக அரசு சாதனை என்னவென்றால் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் இது தான் பெருத்த சாதனை, இலவச பேருந்து பயணம், மகளிருக்கு ஆயிரம் இதை யார் கேட்டது…கல்லூரி பிள்ளைகள், பெண் பிள்ளைகளுக்கு ஆயிரம் கொடுத்தோம் என்கிறீர்கள். அதனால் இடைநிறுத்தம் பண்ணாமல் தொடர்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.
ஆசிரியர் தேர்வு எழுதிவிட்டு 10 வருஷமா காத்துக் கொண்டிருக்கிறோம் பணி கொடுங்கள் என்று… மக்கள் நல பணியாளர்கள், கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து சேவை செய்தோம்.. பணியை நிரந்தரமாக்கு என்கிறார்கள்.
இலவசமாக தரமான கல்வி, மருத்துவம், தூய குடிநீர், தடையற்ற மின்சாரம், பயணிக்க பாதை இதுதான் அடிப்படைக் கட்டமைப்பு, இது எதும் நடந்திருக்கிறதா? ஒரு அறிவார்ந்த சமூகத்தை வழிநடத்த கூடிய தலைவர்கள் செய்யக்கூடிய செயலாக உள்ளதா?..
காமராஜர் செய்ததை ஒரு கால் தூசி இந்த ஆட்சிகள் செய்திருக்கிறதா.. என் பணத்தை எடுத்து எனக்கு கொடுக்கிறதுக்கு பெயர் நலத்திட்டம் இல்லை. நாசக்கார திட்டம்.
ஒரு நாளைக்கு 50,000 கோடி மக்களை குடிக்க வைத்து விட்டு சுகாதாரம், விளையாட்டு துறை என்று தனி அமைச்சகம்.. மக்கள் பேரிடர் காலத்தில் இறந்த போது நிவாரணம் கொடுக்கவில்லை..
கொரோனாவில் இறந்த போது பணம் கொடுக்கவில்லை. மீன்பிடிக்க சென்று இறந்த போது 10 லட்சம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. கள்ளச்சாரயம் குடித்தவர்களை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும், போய் பார்க்கிறீர்கள்..
இறந்து போன மீனவர்களை யாரும் போய் பார்க்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் இறந்து இருக்கிறான். 2 கோடி 10 லட்ச ரூபாய் பணம் யாருடையது. இவ்வளவு நாள் சாராயம் சம்பாதித்த பணத்தில் தானே நிவாரணம் கொடுத்திருக்க வேண்டும்.
மக்கள் பணத்தை எப்படி கொடுக்கலாம். நாட்டைக் காப்பாத்த ராணுவத்தில் இறந்தால் நாடு காப்பாற்றும் என்ற குடும்பம் நம்பிக்கையை இந்த நாடு கொடுத்திருக்கின்றதா? இதுவரைக்கும் தமிழகத்தில் இறந்த ராணுவ வீரர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.
அந்த வீட்டிற்கு வேலை கொடுத்து இருக்கிறதா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது கோ பேக் மோடி.. ஆளுங்கட்சியாக இருக்கும் போது வெல்கம் மோடி, எதிர்ச்சியாக இருக்கும் போது இந்தி தெரியாது போடா.. கடந்த ஆட்சியில் பொன்முடி வீட்டு முன்னாடி மதுக்கடையை எதிர்த்து போராடினார். இப்போது எதிர்த்தால் அவர் அரசுக்கு எதிராக பேசுவதாக தானே அர்த்தம்..
பள்ளிக்கூட கட்டிடம் சிதலமடைந்து உள்ளது. அதை கட்டமைக்க நிதி இல்லை.. அங்கு தலைமை ஆசிரியர், முன்னாள் ஆசிரியர், உள்ளுரிலிருந்து கொடையாளர்கள் ஒருங்கிணைந்து கட்டி வருகின்றனர். பள்ளிக்கூடத்தை சீரமைக்க பணம் இல்லை.. சமாதி வைப்பதற்கும், பேனா வைப்பதற்க்கும் நிதி எங்கிருந்து வருகிறது..இதற்கு பதில் உள்ளதா..
காமராஜர், வஉசி, வெள்ளைக்காரனை எதிர்த்துப் போரிட்ட சின்னமலை போன்றவருக்கு சிலை எங்கு உள்ளது.. கொழுப்பெடுத்த பணத்திமிரு, அதிகார திமிர், ஒரு தலைமுறை வந்து சிரிக்காது இதை பார்த்து என்ன சாதனை பண்ணினீர்கள் என்று என்றார்..
தமிழகத்தில் இனி கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில், எலி மருந்து போன்ற விஷத்தை குடித்து உயிரிழக்க வேண்டாம் விஷசாராயம் குடித்தால் போதும் கஷ்டமும் தீர்ந்துவிடும். வீட்டிற்கு 10 லட்சம் ரூபாய் பணமும் கிடைக்கும் என்றார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.