மயில் சின்னம் கேட்டால் தேசிய பறவை.. தாமரை மட்டும் என்ன? நான் வழக்கு போடுவேன் : சீமான் உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2024, 12:31 pm

மயில் சின்னம் கேட்டால் தேசிய பறவை.. தாமரை மட்டும் என்ன? நான் வழக்கு போடுவேன் : சீமான் உறுதி!!

சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் நேரத்தில் நான் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.

நான் மயில் சின்னத்தை கேட்டபோது தேசிய பறவை என கொடுக்க மறுத்தனர். ஆனால் தேசிய மலர் தாமரை பாஜகவிற்கு கொடுக்கப்பட்டது ஏன்? * பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்வேன்.

அங்கீகாரம் பெறுவதற்குள் என்னை தூக்கி எறிந்து விடுகிறீர்கள். கரும்பு விவசாயி சின்னம் தராமல் என்னை முடக்க நினைக்கிறார்கள்.

ஒரு இடத்தில் கூட 100 வாக்குகளுக்கு மேல் பெறாத கர்நாடக கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கொடுத்துள்ளனர் என்று அவர் கூறினார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!