இங்கே வந்தால் தமிழ்.. வடக்கே சென்றால் இந்தி.. இதுல LOCAL LANGUAGEனு சுருக்குவது : அமித்ஷா பேச்சுக்கு உதயநிதி கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2023, 4:30 pm

மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த, மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது , மொழிக்கு மரியாதை அளிக்காமல் பாரம்பரியத்துக்கு முழுமையாக மரியாதை செய்ய முடியாது. இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல, மாநில மொழிகளுக்கு மரியாதை கொடுத்தால்தான் அதிகாரப்பூர்வ மொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை மக்களுக்கு உருவாகும்.

அதிகாரப்பூர்வ மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சட்டத்தின் மூலம் வலியுறுத்த முடியாது. அது நல்லெண்ணம் மற்றும் ஊக்கம் காரணமாக ஏற்பட வேண்டும். இந்தியை முழுமையாக ஏற்கும் காலம் வர தாமதமானாலும், இறுதியில் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்து இருந்தார். இவர் பேசியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்வீட்டரில் கூறியிருப்பதாவது, இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை “Local Language” என்று சுருக்குவது எனும் பா.ஜ.கவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆக்ரோஷமாக வந்தாலும் – அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள் , இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!