தவறான ஆளை தேர்ந்தெடுத்தால் 5 வருடம் அநீதி.. சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் ; வைரமுத்து வலியுறுத்தல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்க உள்ளது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும் 100% வாக்குப்பதிய அனைவரும் முன் வர விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் உள்பட 950 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் 76 பேர் பெண்கள். 874 பேர் ஆண்கள். இவர்களின் எதிர்காலத்தை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் நிர்ணயம் செய்கிறார்கள்.
மேலும் படிக்க: அண்ணாமலை ஜெயிக்கணும்… கைவிரலை துண்டித்த BJP நிர்வாகி : மருத்துவமனையில் அனுமதி!!
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள X தளப்பதிவில். விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும்.
பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்.
சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள், வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம் என பதிவிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.