1 கோடி பெண்களிடம் கையெழுத்து வாங்கி தந்தால் டாஸ்மாக்கை மூடுவீங்களா? உதயநிதிக்கு ஷாக் கொடுத்த ராஜேஸ்வரி பிரியா!!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2023, 4:43 pm
1 கோடி பெண்களிடம் கையெழுத்து வாங்கி தந்தால் டாஸ்மாக்கை மூடுவீங்களா? உதயநிதிக்கு ஷாக் கொடுத்த ராஜேஸ்வரி பிரியா!!
சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்ச்சி அண்மையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்தார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள்.
50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “100 நாட்களில் 1 கோடி பெண்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கையெழுத்து வாங்கி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று வலியுறுத்தி விளையாட்டுத்துறை அமைச்ச உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தால் அவரது தந்தை ஸ்டாலின் அவர்களிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை மூட வைப்பாரா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் தமிழகத்தில் மூட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பூர்ண மதுவிலக்கு என்று திமுக பிரச்சாரம்செய்த நிலையில், 2021ல் படிப்படியாக மதுவிலக்கு என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், டாஸ்மாக்கை மூட அரசுக்கு மனம் இல்லை என்றும் குற்றம்சாட்டுகின்றன.