அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் கை சின்னத்தில் வாக்குகள் பதிவாவதாக புகார் : வாக்குப்பதிவு நிறுத்தம்… பரபரப்பு !!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2023, 11:17 am
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்து வருகின்றனர்.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சைகள் என 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
ஈரோடு பிரப் ரோடு வாக்குப்பதிவு மையத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு மாறி பதிவாவதாக புகார் எழுந்துள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுப் போட்டால் கை சின்னத்தில் லைட் எரிவதாக அதிமுக புகார் மனு அளித்ததுள்ளது . புகாரையடுத்து 178வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
இதே போல ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 45 வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.