அந்த கட்சி பத்தி சொல்லணும்னா அது ஆடியோ, வீடியோ கட்சி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2023, 9:49 am

கட்சிக்குள்ளேயே இருக்கக் கூடியவர்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்ட கூடியவர்கள் தான் அந்த கட்சி புகாரே வந்துள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள விழி காணும் நிழற்படம் வரலாற்றின் வழித்தடம் எனும் முதல்வரின் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளிவந்த செய்தி பொய் செய்தி என்றார்.

பாஜக என்றாலே ஆடியோ – வீடியோ கட்சி தான் என கூறிய அவர், கட்சிக்குள்ளேயே இருக்கக் கூடியவர்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்ட கூடியவர்கள் என புகார் கூறினார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!