பண்ணை வீட்டில் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி ; இளையராஜாவின் தாய் மற்றும் மனைவி சமாதிக்கு நடுவே உடலை அடக்கம் செய்ய திட்டம்!!

Author: Babu Lakshmanan
27 January 2024, 11:55 am

தேனியில் இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் சமாதிக்கு நடுவில் மகள் பவதாரினியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் உயிர் இழந்த இளையராஜாவின் மகள் பவதாரணி உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள இளையராஜா பண்ணை வீட்டிற்கு பவதாரினியின் உடல் எடுத்து வரப்பட்டது.

முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்கிருந்து பண்ணை வீட்டிற்கு காலை வந்தார்.

உயிரிழந்த இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவா என இருவரது உடல் இந்தப் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இவர்கள் இருவரின் சமாதிக்கு நடுவில் மகள் பவதாரிணியின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இளையராஜாவின் குடும்ப உறுப்பினர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ