‘இளையராஜா எனும் நான்… கடவுள் மீது ஆணையாக’…. ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றார் இசைஞானி… வைரல் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
25 July 2022, 4:28 pm

ராஜ்யசபாவின் நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா பதவியேற்றுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இசைஞானி என அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா அண்மையில் ராஜ்சபா நியமன எம்பியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நியமன எம்பியாக அறிவிக்கப்பட்டவர்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், அந்த சமயம் இளையராஜா அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததால், அவரால் பதவியேற்க முடியவில்லை.

இந்நிலையில் இன்று ராஜ்யசபா எம்பி.,யாக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் இளையராஜா தமிழில் பேசி பதவியேற்றுக் கொண்டார். இளையராஜா எனும் நான் எனத் தொடங்கி கடவுள் மேல் ஆணையாக எனச் சொல்லி பதவியேற்பு பிரமாணத்தை படித்து முடித்தார்.

இதையடுத்து, அவர் பதவியேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/umapathyshiva/status/1551491388352901121
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 709

    0

    0