கோவைக்கு அடுத்த 2 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை!

Author: Hariharasudhan
23 October 2024, 2:44 pm

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: நேற்று (அக்.22) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.23) காலை 05.30 மணி அளவில் புயலாக (டானா) வலுப்பெற்றது.

இதனையடுத்து, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் பாரதீப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு – தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 610 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக்.24) அதிகாலை வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.

தொடர்ந்து வடக்கு ஒடிசா – மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக நாளை மறுநாள் (அக்.25) இரவு காலை கரையை கடக்கக்கூடும். அந்த நேரத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதேநேரம், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மட்டும் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல், கோயம்புத்தூர் AWS, வால்பாறை PAP, திருப்பூர் PWD, நத்தம் (திண்டுக்கல்), சோலையார் (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம், குண்டடம் (திருப்பூர்), கோயம்புத்தூர்-தெற்கு பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: அதுக்காக இப்படியா? காதை அறுத்த போதை ஆசாமி!

மேலும், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!