ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு… அதிர்ச்சியில் திமுக.. தமிழக அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2023, 9:12 am

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல மாநிலங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமைச்சர் என்பதால் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதேபோல உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜகவினர் நேற்று ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடரவும் பாஜக தரப்பில் ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சனாதன சர்ச்சை குறித்து விரிவான அறிக்கைகளையும் வெளியிட்டிருக்கின்றனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சனாதனத்தை பொதுவெளி, அரசு நிகழ்ச்சிகளில் ஆதரித்து பேசி வருபவர். இதனாலேயே கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருந்தார்.
தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதனால் அமைச்சர் உதயநிதி மீது ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் கடும் அதிருப்தியில் இருப்பது இயல்பானதுதான் என்கின்றன ஆளுநர் மாளிகை வட்டாரங்கள்.

இதனாலேயே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர விரைவிலேயே அனுமதி கொடுத்துவிடுவார் ஆளுநர் ஆர்.என்.ரவி என நம்பிக்கையோடு காத்திருக்கிறதாம் சுப்பிரமணியன் சுவாமி உட்பட பாஜக தரப்பு.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 366

    0

    0