தலைநகரில் தமிழக முக்கிய தலைவர்கள் : அடுத்தடுத்து டெல்லியில் நடக்கும் முக்கிய சந்திப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2023, 10:09 am
நாளை மறுநாள் (28 ஆம் தேதி) ஜனாதிபதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
எனவே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது கவர்னரின் செயல்பாடுகள் குறித்த கோரிக்கை வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதக்களுக்கு கவர்னர்கள் முடிவெடுக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில் தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணம் அமைய இருக்கிறது.
இந்த நிலையில் கவர்னர் ரவி, மூன்று நாள் பயணமாக இன்று (ஏப்.,26) டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் இன்று பிற்பகல் 3:20 மணிக்கு கோவையில் இருந்து டில்லிக்கு புறப்படுகிறார். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக – பா.ஜ., தலைவர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வரும் சூழலில் பழனிசாமியின் பயணம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவர் நாளை இரவு டில்லியில் இருந்து கோவை திரும்புகிறார்.