அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராமுக்கு முக்கிய பதவி : எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 10:01 pm
EPS
Quick Share

அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராமுக்கு முக்கிய பதவி : எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பிரபல நடிகை காயத்ரி ரகுராம், சினிமாவில் நடனக்கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

அந்த சமயத்தில் அரசியலில் நுழைந்த அவர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு காயத்ரி ரகுராமுக்கும் அப்போதைய பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

காயத்ரி ரகுராம் திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நான் அரசியலில் இருந்து விலகி வெளியில் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவது இல்லை என்று கூறினார்.

பின்னர் அடுத்த நாளே தான் பாஜகவில் நீடிப்பதாக கூறினார். எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்த போது காயத்ரி ரகுராமிற்கு எந்த சிக்கலும் வரவில்லை. அவருக்குப்பிறகு மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு காயத்ரி ரகுராம் ஓரங்கட்டப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த காயத்ரி ரகுராம் தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்தார். கட்சியில் இணைந்த நாளில் இருந்தே பலருக்கும் உதவி செய்திருக்கிறேன். வெளிநாட்டில் சிக்கித்தவித்த பல தமிழர்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறேன். என்டைய சொந்த செலவில் நான் பலருக்கும் உதவி செய்திருக்கிறேன். நான் கடந்த 8 ஆண்டு காலமாக கடன் வாங்கி உதவி செய்திருக்கிறேன். கட்சிக்கு களங்கம் விளைவித்தாக கூறி என்னை என்னை பாஜகவை விட்டு நீக்கியது வருத்தத்தையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தொடர்ச்சியாக கடந்த ஓராண்டு காலமாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சனம் செய்தது வந்தார்.

இந்த நிலையில் திடீரென திருமாவளவனை சந்தித்து வாழ்த்து கூறினார். அவர் வேறு அரசியல் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் திடீரென கடந்த ஜனவரி 19ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறியதுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அதிமுகவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துகளை X தளத்தில் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு தற்போது அதிமுகவில் மகளிர் அணி துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்திரி ரகுராம் அவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார், கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 194

    0

    0