அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்பு … ஆகாஷ்வாணி வார்த்தையை பயன்படுத்த திமுக எம்பி டி.ஆர்.பாலு எதிர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2023, 1:59 pm
அகில இந்திய வானொலி (All India Radio) என்பதற்கு பதிலாக ‘ஆகாஷ்வாணி’ என இந்தியில் பயன்படுத்த தொடங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஆகாஷ்வானி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது நியாயமற்றது. இது சரியானது அல்ல, ஏற்றுக்கொள்ள முடியாதது.
அகில இந்திய வானொலியில் தமிழுக்கு உரிய இடத்தை மறுத்து, அதற்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் பிரசார் பாரதியின் நடவடிக்கைக்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.