2014ல் திமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கலயே… மறந்துட்டீங்களா? டி.ஆர். பாலுவுக்கு பாஜக பதிலடி!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 8:37 am

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு எம்பி கூட கிடைக்காது என திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார். மூழ்கும் கப்பலாக இருக்கும் பாஜக எப்படி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்பி சீட்டை கூட கொடுக்க மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சாதனைமிக்க சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்றும், தமிழ்நாட்டில் வசூலித்து உத்தரப்பிரதேசத்திலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அக்மார்க் உண்மை என்பதை புரிந்துகொண்டுள்ளார் அமித்ஷா என்றும், தமிழ்நாட்டில் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்த அமித்ஷா முயற்சிக்கிறார் என்றும் டிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் டிஆர் பாலுவுக்க பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 2014ல் திமுக விற்கு ஒரு சீட் கூட தமிழக மக்கள் கொடுக்கவில்லை என்பதை டி.ஆர்.பாலு மறந்து விட்டார். அதே நிலை தான் 10 வருடங்கள் கழித்து 2024 லும் ஏற்படும் என்று டி ஆர் பாலுவுக்கு தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 321

    0

    0