குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வியை முடக்கும் திமுக : இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2024, 5:22 pm
cable
Quick Share

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை காரணமாகவும், சேவை மையங்களின் குறைபாடுகள் காரணமாகவும், செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு காரணமாகவும், அம்மாவின் ஆட்சியில் 30 லட்சமாக இருந்த இணைப்புகள் தற்போது சுமார் 10 லட்சமாகக் குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது.

இந்நிலையில், Conditional Access System (CAS) நிர்வகிக்கும் மென்பொருள் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய AMC தொகையை முறையாக செலுத்தாத காரணத்தால், அந்நிறுவனத்தினால் கடந்த 15.6.2024 அன்று காலை முதல் தமிழகமெங்கும் உள்ள அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டு வருகிறது.

இதனால், குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொழிலை நம்பியுள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும், அரசு கேபிள் டிவி நேரடி வாடிக்கையாளர்களும், இந்தத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள கேபிள் டிவி தொழில்நுட்ப ஊழியர்களின் குடும்பங்களும் மிகுந்த துயரத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளது.

இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி-ஐ முடக்க நினைக்கும் விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 211

2

0