ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? பிரதமர் பொறுப்பு ஏற்பாரா? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!

Author: Sudha
12 ஆகஸ்ட் 2024, 10:33 காலை
Quick Share

அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், செபி நிறுவன தலைவர் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருப்பதாக ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம் குற்றச்சாட்டை தெரிவித்திருந்த நிலையில், ‘இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் உடையவை’ என, செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.அதானி குழுமமும் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் எதிக்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து பேசும் போது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். போட்டி நடுவர் முடிவெடுக்கும் போது தவறு செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும் தெரிகிறது.
அப்படியென்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? இது தான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை.

செபி தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா? அல்லது செபி தலைவரா? அல்லது இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்குமா?

பார்லி கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது.செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கேள்விக்குறி ஆகி உள்ளது இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறினார்.

  • Divorce விவாகரத்து வழக்கில் டுவிஸ்ட்.. ‘ஓ மை கடவுளே’ பட பாணியில் கோர்ட்டில் நடந்த சம்பவம்!!
  • Views: - 262

    0

    0