திமுக எம்பி கதிர் ஆனந்த்க்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு : உயர்நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 6:00 pm

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்.

இவர் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2012-2013ம் நிதியாண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு, வருமான வரியையும் கால தாமதமாக கட்டியுள்ளார் எனக்கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் திமுக எம்.பி கதிர் ஆனந்திற்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பினாமி சட்டத்தின் கீழ் மே 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விசாரணை அதிகாரி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கதிர் ஆனந்த் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் படிக்க: வாக்கு இயந்திரத்தில் பாஜக பெயர்.. குவியும் புகார் : சைலண்ட் மோடில் தேர்தல் ஆணையம்.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!

அதில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், கதிர் ஆனந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை ஜூன் 3வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 267

    0

    0