மீண்டும் இரண்டாவது முறையாக இந்திய பிரதமருக்கு மகுடம் : உலக சாதனை படைத்த நரேந்திர மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2022, 8:07 pm

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின் படி, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்தாண்டும், உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பு முடிவுகளை மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்டது. அதில், பிரதமர் நரேந்திரமோடி 75 சதவீத மக்களின் ஆதரவை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய செல்வாக்கு ஒப்புதல் மதிப்பீட்டில், மெக்சிகோ அதிபர் ஆண்டர்ஸ் இமானுவேல்(63 சதவீதம்) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி (54 சதவீதம்) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (42 சதவீதம்) நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (41 சதவீதம்) பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். ஜோ பைடனை தொடர்ந்து கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ (39 சதவீதம்) ஆறாவது இடத்திலும், ஜப்பான் பிரதமர்புமியோ கிஷிடா (38 சதவீதம்) ஏழாவது இடத்தில் உள்ளதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 474

    0

    0