இந்தியாவின் 2வது பொருளாதார நாடு தமிழ்நாடு : 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பெருமிதம்!
Author: Udayachandran RadhaKrishnan19 February 2024, 10:36 am
இந்தியாவின் 2வது பொருளாதார நாடு தமிழ்நாடு : 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பெருமிதம்!
இந்தாண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர் அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுவதும் படிக்காமல், அதில் குறிப்பிட்டிருந்த திருக்குறளை மேற்கொள்காட்டி வெறும் 4 நிமிடங்களை உரையை வாசித்து விட்டு அமர்ந்தார்.
தமக்கு அளிக்கப்பட்டுள்ள உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாகவும், அரசு தயாரித்த உரையை படிப்பது அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல் அமையும் என்று கூறிய ஆளுநர் ஆர்என் ரவி, அரச தயாரித்த உரையின் உண்மைத் தன்மை மற்றும் நெறிகளுடன் தமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் கூறினார். மேலும், தேசிய கீதத்தை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் இசைக்க வேண்டும் என பலமுறை கூறியதாகவும், ஆனால், அதனை நடைமுறைப்படுத்தது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இறுதியில், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் உரையை முடித்தார்.
மேலும், அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கிய போது, தேசிய கீதம் வாசிக்கப்படும் முன்பு அவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி வெளியேறினார்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று வழக்கம் போல நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது. மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது மத்திய அரசு என குற்றச்சாட்டு வைத்த அவர், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.