ரொம்ப பிரபலம் ; வரியால் வந்த பிராப்ளம்; இன்ஃபோசிஸ் செய்த 32,000 கோடி வரி ஏய்ப்பு
Author: Sudha1 August 2024, 8:23 am
இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளிநாடுகளில் கிளைகளை நிறுவி அதன்மூலம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைகள் வரிகள்(IGST) மூலம் 32,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக தெரிவித்து ஜிஎஸ்டி இயக்குநரகம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வெளிநாட்டு சேவைகளைப் பெற்று பயனடைந்துள்ள இன்ஃபோசிஸ் லிமிடெட் பெங்களூரு நிறுவனம் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி செலுத்தத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் புகார் குறித்து விளக்கம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ஜிஎஸ்டி விதிமுறைகளின்படி, வெளிநாட்டு கிளை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள சேவைகளுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது எனவும்,தங்கள் நிறுவனங்களின் மேற்கண்ட செலவினங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லை என்றும் சொல்லியுள்ளது.