படிப்புடன் ஒரு விளையாட்டையும் வாழ்வில் இணைத்துக்கொள்ளுங்கள் : இளைஞர்களுக்கு CM ADVICE!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2024, 5:04 pm

படிப்புடன் ஒரு விளையாட்டையும் வாழ்வில் இணைத்துக்கொள்ளுங்கள் : இளைஞர்களுக்கு CM ADVICE!!

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக இளம் வயதில் ‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது குகேஷூக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.

கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழகத்தில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்.

இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!