உளவுத்துறை அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட்… அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு : பின்னணியில் பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 12:59 pm

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே பரபரப்பாக செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை. அவருக்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது.

இதுகுறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை பதிவு செய்திருந்தார். இதையடுத்து அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணாமலைக்கு 2 PSO உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவர்.

உளவுத்துறையினர் ஏற்கனவே அறிக்கையாக தயார் செய்து அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய அச்சுறுத்தல் குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும், அதனடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை பாஜக அலுவலகமாக கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே போல நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்ததும், அந்த நபரை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அச்சுறுத்தலால் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பாதுகாப்பு பிரிவாக பார்க்கப்படும் ஒய் பிரிவு என்பது நாட்டில் 4வது இடத்தில் இருக்கக்கூடிய பாதுகாப்பு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1754

    0

    0