கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்… முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan7 ஏப்ரல் 2024, 1:58 மணி
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்… முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக தனது தேர்தல் அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, கேஸ் சிலிண்டர் ரூ. 500, பெட்ரோல் விலை ரூ. 75 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியில் சேர்த்துக்கொள்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி” தமிழ்நாட்டில் விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நமது அரசும், அமைச்சர் உதயநிதியும் உறுதிப்பூண்டுள்ளனர். அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கோரிக்கை அடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளில் மேலும் ஒரு வாக்குறுதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவை மைதானம் அமையும்” என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
0
0