அதிமுக சார்பில் மார்ச் 10,11ல் நேர்காணல்.. வேட்பாளர் தேர்வு : எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி, புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி என 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கப்பட்டது.
ஏராளமானவர்கள் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தான் விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்க்காணல் நடத்தப்பட உள்ளது. இந்த நேர்காணல் என்பது சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கம் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கு நேர்க்காணல் நடத்தப்பட உள்ள.
சென்னையில் உள்ள தலைமை கழக புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் 10 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 11ம் தேதி (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் நேர்க்காணல் நடைபெற உள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் (தனி), சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது. மேலும் அதேநாளில் பிற்பகல் 2 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), கோயம்புத்தூர் தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது.
அதன்பிறகு 11ம் தேதியான திங்கட்கிழமை பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர் தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது.
இந்த நேர்க்காணலில் பங்கேற்போர் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.