நடுரோட்டில் தலைக்கேறிய போதையில் ரகளை செய்த பெண்கள் : முகம் சுழிக்க வைத்த 3 பேர்… அதிர்ச்சியில் தலைநகரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 4:28 pm

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு மதுபோதையில் 3 பெண்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சாலையில் நடந்த சென்றவர்களிடம் வம்பிற்கு செல்வது போல் ரகளை செய்து முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடந்து கொண்ட சம்பவத்தால் அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

சிலர் அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் போலீசார் பேசிக் கொண்டு இருந்தனர். போலீசார் சொல்வதை கேட்காமல் ரகளையில் ஈடுபட்டனர்.

அப்பகுதில் திருமண விழாவில் உணவு பரிமாறும் வேலைக்கு வந்தவர்களும் என்றும், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

ரகளையில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர், மூன்று பெண்களையும் கண்ணகி நகரில் உள்ள அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர்கள் வீடியோ எடுத்து, இணையத்தில் பகிர்ந்தனர். .

இந்நிலையில், ரகளையில் ஈடுபட்ட 3 பேரில் சோனாலி என்ற பெண் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மாடியில் இருந்து குதித்ததில் இடுப்பு எலும்பு, கால்கள் முறிந்ததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இளம்பெண் சோனாலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனாலி உள்பட 3 பெண்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 473

    0

    0