ஐபிஎல் கிரிக்கெட் சர்ச்சை… நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய மும்பை போலீஸ்…!!

Author: Babu Lakshmanan
25 April 2024, 12:45 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரலை செய்த விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமை வியாகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சட்டவிரோதமாக, ஐ.பி.எல். போட்டிகள் பேர்பிளே (Fairplay) என்ற செயலியின் மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்துள்ளது. இதனால், தங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க: அரசுப் பேருந்தில் இருந்து இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட நடத்துநர்… அதுக்கு இதுதான் காரணம் ; அமைச்சர் கொடுத்த விளக்கம்!!!

இந்த நிலையில் இந்த குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதனடிப்படையில், வரும் 29ந் தேதி நடிகை தமன்னா நேரில் ஆஜராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!