அரசியலுக்கு ஆயத்தமாகிறாரா நடிகர் விஜய்? 234 தொகுதிகளுக்கு குறி? தேதியுடன் வெளியான அறிவிப்பு!!

விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 17ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த “10 மற்றும் 12-ஆம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வரும் 17-ஆம் தேதி சந்திக்க உள்ளார் நடிகர் விஜய்.

இதனிடையே, நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பாக ரசிகர்கள் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதனால், விஜய் விரைவில் அரசியல் வர உள்ளார் என பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில், உலக பட்டினி தினத்தில் அனைவருக்கும் மத்திய உணவு வழங்க விஜய் வலியுறுத்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு வழங்கப்பட்டது. மேலும், சமுதாய தலைவர்கள் பிறந்தநாள் விழாவில் ரசிகர்களை பங்கேற்க செய்து அரசியல் மையப்படுத்துகிறார் விஜய்.

அரசியல் களத்தில் கால்பதிக்கவுள்ள நடிகர் விஜய் தனது நலத்திட்டங்களில் தொகுதியை மையப்படுத்தி அறிக்கை வெளியாகி வருகிறது. தொகுதி வாரியாக மத்திய உணவு, தொகுதி வாரியாக 3 இடங்கள் பிடித்த மாணவர்கள் என தொகுதியை மையப்படுத்தி அறிக்கை வெளியிடப்படுகிறது.

எனவே, தொகுதி என்பதை குறிப்பிட்டு அறிக்கைத் தரும் விஜய் அரசியல் களத்திற்கு ஆயுத்தமாவதாக ரசிகர்கள் எதிர்பார்த்துருக்கிறார்கள். இதனால், 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிகளை மையப்படுத்தி வருகிறாரா? விஜய் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுத்தவங்களுக்கு வழி விடு.. விஜய் டிவி பிரியங்காவை LEFT & RIGHT வாங்கிய டிடி!

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது திவ்யவதர்ஷினி என்கிற டிடி. இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவிலும்…

12 minutes ago

விஜய் என்கிட்ட ஒன்னு கேட்டார்..பல நாள் ரகசியத்தை உடைத்த ரம்பா.!

விஜயுடன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்த நடிகை ரம்பா 1990-களில் முன்னணி நடிகையாக விளங்கிய ரம்பா,தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை…

39 minutes ago

வரும் 2026 தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் தமிழக பட்ஜெட் : ஹெச் ராஜா கிண்டல்!

திருச்சி, பாஜக மாவட்ட அலுவலகத்தில் டாஸ்மாக் துறையில் நடந்த ஊழல் குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு…

2 hours ago

லஞ்சம் வாங்கிய விஏஓ… துரத்திய போலீஸ்.. கைதுக்கு பயந்து குளத்தில் குதித்து தப்பியோட்டம்!

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம்…

2 hours ago

2 வயது மகள் உயிரிழப்பு..உடைந்து போன பிரபல கிரிக்கெட் வீரர்.!

மகளை இழந்த துக்கத்தில் ஹஸ்ரத்துல்லா பிரபல ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹஸ்ரத்துல்லா ஷசாய் குடும்பத்தில் ஏற்பட்ட துயர நிகழ்வு ரசிகர்கள்…

3 hours ago

This website uses cookies.