அதிமுகவுக்கு தாவுகிறாரா திமுக எம்எல்ஏ நாசர்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபர!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 May 2023, 6:53 pm

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவையொட்டி சென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுங்கட்சியாக திமுக இருந்த போது உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகாமல் இருக்க பல தடங்கல்களை தந்ததாக தெரிவித்தார். போஸ்டர் ஓட்டினால் கிழிப்பேன் என திமுக வினர் அச்சுறுத்தியதாகவும், ஆனால் அதனையும் மீறி படம் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்ததாக குறிப்பிட்டார்.

உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்த பிறகு அதிமுக பல்வேறு வெற்றிகளை பெற்றது என்றும் திண்டுக்கல் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,பால்வளத் துறை அமைச்சர் நாசருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பால் ஊற்றி விட்டதாகவும், தமாஷ் தர்பார் கூட்டத்தில் இன்னும் சிலர் உள்ளதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது பிடிஆர் போல பொருளாதார வள்ளுநர்கள் இல்லை. அறிவும், ஆற்றலிலும் சிறந்தவர் பிடிஆர் எனவும் பெருமைப்பட கூறினார்கள். தற்போது பிடிஆருக்கு அறிவும் ஆற்றலும் இல்லையா என கேள்வி எழுப்பினார்.

30 ஆயிரம் கோடி ஊழல் என அமைச்சர் பிடிஆர் பேசியது உண்மையாக தான் இருக்கும். ஆடியோ வெளியானதால் தான் அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது என முதல்வரே உறுதி படுத்தியுள்ளதாக தெரிவித்தார். முதல்வரும், பிடிஆரும் என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் நிதி அமைச்சராக இருந்தவர் டம்மியாக தான் இப்போது வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

தனக்கு பின்னால் உதயநிதி ஸ்டாலின் வரவேண்டும் என்பதற்காகவே அதற்கேற்றார் போல் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பிடிஆர், ஆவடி நாசர் ஆகியோரை அதிமுகவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லையென தெரிவித்தவர், ஆனால் அவர்கள் வந்தால் அங்கீகரிப்போம் என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 518

    0

    0