ஆளுநரை மிரட்டுகிறாரா? திமுகவினரே பேசுவதற்கு தயங்கும் வார்த்தையில் சபாநாயகர் பேசியுள்ளார் : அண்ணாமலை கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 10:02 pm

ஆளுநரை மிரட்டுகிறாரா? திமுகவினரே பேசுவதற்கு தயங்கும் வார்த்தையில் சபாநாயகர் பேசியுள்ளார் : அண்ணாமலை கண்டனம்!

இந்தாண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர் அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுவதும் படிக்காமல், அதில் குறிப்பிட்டிருந்த திருக்குறளை மேற்கொள்காட்டி வெறும் 4 நிமிடங்களை உரையை வாசித்து விட்டு அமர்ந்தார்.

தமக்கு அளிக்கப்பட்டுள்ள உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாகவும், அரசு தயாரித்த உரையை படிப்பது அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல் அமையும் என்று கூறிய ஆளுநர் ஆர்என் ரவி, அரச தயாரித்த உரையின் உண்மைத் தன்மை மற்றும் நெறிகளுடன் தமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் கூறினார். மேலும், தேசிய கீதத்தை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் இசைக்க வேண்டும் என பலமுறை கூறியதாகவும், ஆனால், அதனை நடைமுறைப்படுத்தது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இறுதியில், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் உரையை முடித்தார்.

மேலும், அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கிய போது, தேசிய கீதம் வாசிக்கப்படும் முன்பு அவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி வெளியேறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆளுநர் ஆர்என் ரவி மரபுகளை மீறி செயல்பட்டதாக ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டினர். அதேவேளையில், ஆளுநர் மரபுகளை கடைபிடித்ததாகவும், சபாநாயகர் தான் விதிகளை மீறி பேசியதாகவும் பாஜக தெரிவித்தது.

இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
இன்று தமிழக சட்டசபையில் சபாநாயகர் திரு அப்பாவு மொழி பிரயோகம் செய்ததை கண்டு வியப்படைந்தேன்.
தி.மு.க. உறுப்பினராக உள்ளவர்களே பேசுவதற்கு பயன்படுத்துவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் மொழியை தமிழக சட்டசபை சபாநாயகர் பயன்படுத்துகிறார்.

தற்செயலாக, TN DIPR இப்போது இந்த வீடியோவை நீக்கியுள்ளது, பேச்சாளரின் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்ததால் வெட்கக்கேடானது.

மாண்புமிகு தமிழக ஆளுநரை மிரட்டுகிறாரா?
புள்ளிவிவரங்களை காற்றில் வீசுவதும், மக்கள் பார்வையை கையாளுவதும் திமுகவுக்கு புதிதல்ல.

திரு அப்பாவு, PM CARES-ல் பணம் தேவை என்று சொல்வதை விட, திமுகவின் முதல் குடும்பத்திடம் கொள்ளையடித்த பணத்தை திரும்பக் கேட்கலாம், இது முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையும், பொறுப்பும் கொண்டது. இது குறைந்தபட்சம் நமது மாநிலத்தின் ₹8,50,000 கோடிக்கும் அதிகமான கடனை அழிக்க உதவும். முற்றிலும் வெட்கக்கேடானது! என பதிவிட்டுள்ளார்.

  • gangai amaran explained the copyrights issue on good bad ugly எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்