இதுக்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2024, 4:50 pm

இதுக்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட “ஸங்னங்” பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.

11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது.ஏற்கனவே 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி உள்ளது. தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இதற்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? நமது நாட்டிற்குள் ஊடுருவி நமது ஊர்களுக்கு சீனப் பெயர்கள் சூட்டிவரும் சீனாவை கண்டு தொடை நடுங்கும் முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்கவா துடிக்கிறது? என்று பதிவிட்டுள்ளார்

  • Suriya Jyothika Dinner Party சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!
  • Close menu