தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம தேதி நடைபெற்றது. வரும் ஜூன் 4 வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.
விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருந்த சமயத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை புறப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பேரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 6 பைகளில் 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதனை கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது மேற்கண்ட 3 நபர்களும் சென்னையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவகத்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவர்கள் நயினார் நாகேந்திரனின் எம்எல்ஏ கோட்டாவில் உள்ள ரயில் டிக்கெட்டில் பயணித்தார்கள் என்பதும் தொடர் விசாரணையில் தெரியவந்தது.
4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கானது கடந்த ஏப்ரல் மாதமே சிபிசிஐடி வசமானது. அதன் பின்னர் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, நயினார் நாகேந்திரன் , பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க: குமரியில் பிரதமர் மோடி தியானம்… நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் : செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
ஆனால் பல்வேறு கரணங்கள் கூறி நேரில் ஆஜராகுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், இந்த சம்மன் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் நயினார் நாகேந்திரன்.
ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறப்பட்டது. இதனை அடுத்து, தற்போது, திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் , பாஜக ஐடி விங் நிர்வாகி கோவர்தன், நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் 4 பேரும் நாளை மறுநாள் (மே 31) சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.