திமுவினரின் செல்போன்களை ஒட்டு கேட்கும் மத்திய அரசு? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 5:09 pm

திமுவினரின் செல்போன்களை ஒட்டு கேட்கும் மத்திய அரசு? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, எனது, என் மனைவி மற்றும் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்களை தமிழக உளவுத்துறைஒட்டுக்கேட்பதாகவும், என்னை கண்காணிப்பு கோவையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதன்பின் சமீபத்தில் தங்கள் கட்சியினரின் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக்கேட்பதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்திருந்தது. அதுவும் தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் இன்பத்துரை வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்த நிலையில் திமுகவினரின் செல்போன்கள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக திமுக சார்பில் ஆர்எஸ் பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், திமுகவினரின் செல்போன்கள் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் சட்டவிரோதமான மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுகேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!