கூட்டணியில் இருந்து விலகி திமுக தனித்து தேர்தலை சந்திக்க தயாரா? கனிமொழிக்கு அண்ணாமலை சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 9:40 pm

கூட்டணியில் இருந்து விலகி திமுக தனித்து தேர்தலை சந்திக்க தயாரா? கனிமொழிக்கு அண்ணாமலை சவால்!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்.
பிரதமர் இன்று முக்கியமான விசயம் ஒன்றினை சொல்லி உள்ளார் தென் தமிழகத்தின் வளர்ச்சி-யை நான் பார்த்துகொள்கின்றேன் என்னிடம் விட்டுவிடுங்கள் என்று மோடி இன்று கூறி உள்ளார்.

பெரிய பெரிய சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த பூமியில் இன்று நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமை என பிரதமர் கூறி உள்ளார்.

தூத்துக்குடியில் 17-ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை கொண்டு வந்து அடிகல் நாட்டி உள்ளார்.பூவியியல் அடிப்படையில் குலசேகரபட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைவது என்பது அதற்கு ஏதுவான இடம்.

பிரதமர் அடிகல் நாட்டி தொடங்கி வைத்துள்ளதால் பணிகள் விரைந்து முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். திமுக கட்சி என்றாலே அது ஸ்டிக்கர் ஒட்டும் கட்சிதான் என்பதை இன்று நிருபித்து உள்ளனர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்திதாளில் விளம்பரம் கொடுத்துள்ளதில் சைனீஸ் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்துள்ளனர்.

இந்தியாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி என்பது முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு-தான் வந்தது அண்ணாதரை அவர்கள் முதல்வராக இருக்கும்போது சில காரணங்கள் பின்னர்தான் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சென்றது இன்று இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு மீண்டு ம் வந்துள்ளது அதற்கான அடிகல் நாட்டும் போது இது போன்ற சைனீஸ் ஸ்டிக்கர் ஒட்டுவது நியாயமா-?

தவறுகளை செய்துவிட்டு கனிமொழி நியாயபடுத்துவது என்பது சரியல்ல
கனிமொழி கணவு உலகத்தில் வாழ்ந்து வருகின்றார். கனிமொழி பழைய உலகில் நின்று கொண்டு கனவு காண்கின்றார்

திமுக கூட்டணி கட்சிகளை வைத்து வண்டியை ஓட்டி கொண்டு வருகின்றது.
தேர்தலில் கூட்டணி இல்லாமல் திமுக இதுவரை நின்று இருக்குதா-?
கூட்டணியை வேண்டாம் என்று திமுக தேர்தலில் வெள்ள முடியுமா என கனிமொழி எம்பி-க்கு அண்ணாமலை சவால் விடுத்தார்

தேர்தலில் திமுக கட்சி மதுரைக்கு கீழ் ஒரு இடம் கூட வர முடியாது என அண்ணாமலை சவால. அண்ணாமலை தூத்துக்குடி-யில் நிற்பாரா என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்விக்கு-?அவர் என்னை அகில இந்திய தலைவராக ஆக்க நினைக்கின்றார்.மீன்வளம் மற்றும் மீனவர்களின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா நீதிமன்றத்தில் அவர் மீது நடந்து வரும் வழக்கு சரியான முறையில் நடைபெற்று வந்தால் அவர் உள்ளே-தான் செல்ல வேண்டும்.

என் மண் என் மக்கள் நடைபயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது அடுத்து 60-நாட்கள் தொண்டர்கள் கடுமையாக உழைக்க போகின்றனர்.தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…