ஓய்வுக்கு வருகிறதா ஒற்றைத் தலைமை விவகாரம்? திடீர் முடிவு..மகிழ்ச்சியில் அதிமுக…!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 10:07 pm

சென்னையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியின் புதிய பொறுப்புக்கு வந்ததும் முதல் வேலையாக ஓபிஎஸ் அன்கோ கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார் இபிஎஸ்.

நீங்க என்ன என்னை கட்சியில் இருந்து நீக்குவது? இன்றும் நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்; அந்த முறையில் இபிஎஸ் அன் கோ கட்சியில் இருந்து நீக்குவதாக பதிலடி கொடுத்தார் ஓபிஎஸ். இப்படி இருவரும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்க, அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனால் அப்செட்டான ஓபிஎஸ், பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீடும், தேர்தல் ஆணையத்தி்ல் கொடுத்துள்ள மனுவும் மாதக்கணக்கில் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாய் இருந்து வருகிறது. இந்த நிலையில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் அதிமுக மொத்தமும் தன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

எனவே இனிமேல் ஓபிஎஸ்ஸை ஒத்திவைத்துவிட்டு அரசியல் பேசினால் நன்றாக இருக்கும் என்று, மரியாதைக்காக அழுத்தம் திருத்தமாக சமீபத்தில் சொல்லிவிட்டு வந்தார் இபிஎஸ்.

ஆனால் அவரது முடிவை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளாத அந்த பிரபல கட்சி, ஓபிஎஸ்ஸும் எப்போதும்போல் கட்சியில் இணைந்திருந்தால்தான் அதிமுகவுக்கும் நல்லது; கூட்டணிக்கு நல்லது என்று இபிஎஸ்சுக்கு அட்வைஸ் செய்துள்ளது.

அட்வைஸ்சை கேட்டு அப்செட்டான இபிஎஸ், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அதனால உட்கட்சி விவகாரத்தில் அட்வைஸ் எல்லாம் செய்யாம என்னோட பேச்சை கேட்டு நடந்தா அந்த கட்சிக்கு நல்லது.

இல்லை… ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் மீண்டும் சேர்த்தே ஆகணும்னு சொல்லி அடம்பிடிச்சு, இரட்டை இலை முடுக்குறது போன்ற முடிவுக்கு கொண்டு போனால், அதனால் அதிமுகவைவிட அந்த கட்சிக்கு தான் இழப்பு… இது அவங்களுக்கும் நல்லா தெரியும்னு நினைக்கிறேன் என்று அணியின் மூத்த நிர்வாகிகளிடமும், ஆதரவாளர்களிடமும் சொல்லி வருகிறாராம் இபிஎஸ்.

கீழே இறங்கி வராத இபிஎஸ்சின் பிடிவாதத்தால், அதிமுகவில் ஓபிஎஸ்சின் ஆட்டம் அனேகமாக முடிவுக்கு வந்துவிட்டதாகவே அரசியல் அரங்கில் கருதப்பட்டது வந்தது.

இந்நிலையில், அதிமுக தலைமை யுத்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் நாளை முக்கிய அரசியல் பிரபலங்களை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.இந்த சந்திப்புக்கு பிறகாவது அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி பூசல் ஒருவழியாக முடிவுக்கு வந்ததால் சரிதான் என்று மனம் நொந்து கூறிவருகின்றனர் அதிமுகவின் தீவிர விசுவாசிகள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 463

    1

    0