அணி மாறுகிறதா தேமுதிக? ராஜ்யசபா சீட் பெறுவதில் தீவிரம் : யூடர்ன் அடிக்கும் பிரேமலதா!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 10:57 am

அணி மாறுகிறதா தேமுதிக? ராஜ்யசபா சீட் பெறுவதில் தீவிரம் : யூடர்ன் அடிக்கும் பிரேமலதா!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது.

இதனை தொடர்ந்து இரண்டு கட்சிகளும் புதிதாக தனித்தனியாக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதிமுக தலைவர்கள் தேமுதிகவிடம் ரகசிய பேச்சு நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இரு தரப்பு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக முதல் கட்ட ஆலோசனை நடத்தியது.

இந்த சூழ்நிலையில் தேமுதிக தரப்பு அதிமுகவுடன் நடத்தி வந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திடீரென நிறுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பாஜக தரப்பில் மீண்டும் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல பாமகவும் அதிமுகவுடன் ஆரம்பத்தில் தொகுதி பங்கீடு மற்றும் ராஜ்யசபா சீட் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். ஆனால் தங்களால் ராஜ்யசபா வழங்கமுடியாது என அதிமுக தரப்பு தெரிவித்து விட்டதால் பாமகவும் பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாக கூறப்பட்டது.

இதே போல தேமுதிக தலைவர் பிரேமலதா தங்கள் கட்சிக்கும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடராமல் பாஜக தரப்பிற்கு தேமுதிக சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 227

    0

    0