ஆட்சியில் பங்கு கேட்டது நடிப்பா? திருமாவின் திடீர் தந்திரம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2024, 7:34 pm

விசிக திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது. இனி யாரும் நீங்கள் எந்தக் கூட்டணி என்று எங்களைக் கேட்க வேண்டாம் என திருமாவளவன் கூறினார். ஆட்சியில் பங்கு கேட்டது, துணை முதல்வர் பதவி ஏற்க உதயநிதிக்கு என்ன தகுதி என கேட்டது எல்லாம் நடிப்பாகி விட்டது. இந்நிலையில் விஜயுடன் சேர்ந்து புத்தகம் வெளியிடும் விழாவையும் திருமாவளவன் புறக்கணிக்க திட்டமிட்டு இருப்பது அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் டிச.6-ம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த இருந்தது.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை 1999-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விசிக முன்வைத்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கடந்த செப்.12-ம் தேதி நிர்வாகிகளுடன் பேசும்போது, ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்தை திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த காணொலி, வெளிநாட்டு பயணத்தை முடித்து முதல்வர் தமிழகம் திரும்பிய நிலையில், திருமாவளவனின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பின்பு நீக்கப்பட்டது.

இது சர்ச்சையானது. எனினும், இந்த கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என திருமாவளவன் உறுதிபட தெரிவித்திருந்தார். இதற்கிடையே, விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, விசிக இல்லாமல் வடமாவட்டங்களில் திமுக வென்றிருக்க முடியாது என்பது உள்ளிட்ட விமர்சனங்களை தெரிவித்தார்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கூட்டணியில் தொடர்கிறோம் எனக் முன்பு ஒப்புக்குச் சப்பாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திருமாவளவன்.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்திய கட்சித் தலைவர் விஜய், கூட்டணியில் சேருவோருக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்தார். இதன்மூலம் அவர் விசிகஉள்ளிட்ட கட்சிகளுக்கு மறைமுகமாக கூட்டணி அழைப்பு விடுப்பதாகபேசப்பட்டது.
விஜய்யின் ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்துக்கு விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்தார் .

விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவனோ, பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனைபோல” ஆட்சியதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் உத்திவெளிப்பட்டுள்ளது என கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த கருத்து மோதல்களுக்கு இடையே, இரு தலைவர்களும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரே மேடையை பகிர்ந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

ஒரு வார இதழ் சார்பில் சட்டமேதை அம்பேத்கர் குறித்த தொகுப்பு ஒன்று தயாராகி வருகிறது. இத்தொகுப்பில் நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பங்களிப்பு செய்துள்ளனர். சென்னையில் வரும் டிச.6-ம் தேதிநடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில்விசிக தலைவர் திருமாவளவனுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் இருவரும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். தன்னுடைய கட்சி மாநாட்டில் ஆட்சியில் பங்கு என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவின் தலைவரான திருமாவளவன், விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . இந்த சந்தர்ப்பத்தை அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலை கடை திறப்பு விழா மற்றும் பள்ளிக்கூட அறைகள் திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்வதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.

அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது:
பஞ்சமி நிலம் தொடர்பாக பிரச்னை இருக்கிறது. முன்பு கலைஞர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு மீண்டும் இயங்க வேண்டும் என்பது தெரிவித்துள்ளோம். அது குறித்து இந்த நிலைப்பாடு எடுக்கவில்லை. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் நியமிக்க முடிவு எடுத்துள்ளோம். ஏற்கனவே 144 மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓராண்டு கடந்திருக்கிறது. கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நுண்ணிய அளவில் வரைமுறை செய்து ஏராளமான பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கெனவே, நாங்கள் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழக கட்சி கூட்டணியில் இருந்து வருகிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். இரண்டு கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பங்கு உண்டு. நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில்தான் என்னுடைய கவனம் இருக்கிறது. இனி எங்களைப் பார்த்து எந்த கூட்டணி என்று யாரும் கேட்க வேண்டாம்.

இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. ஏற்கெனவே, பலமுறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மையை குலைக்க முயற்சிக்கின்றனர். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மதசார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது, எங்கள் கூட்டணி. இந்தியா கூட்டணி கட்சியை உருவாக்கியதில் எனக்கு பங்கு உண்டு. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை. வரும் 2026 – ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடரும்.

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்து ஓராண்டு ஆகிறது.
ஏற்கெனவே, ஏப்ரல் 14 – ல் அம்பேத்கர் பிறந்த நாளில் வெளியிட திட்டமிட்டு இருந்தது. விகடன், ஆதங்அர்ஜுன் நிறுவனமும் இணைந்து இந்த புத்தகத்தை கொண்டு வருகிறார்கள். ராகுல் காந்தியையும் அழைப்பதாக திட்டமிட்டு இருந்தனர். 40 பேருடைய கட்டுரையின் தொகுப்புகள் தான் எல்லோருக்கும் அம்பேத்கர் என்ற தலைப்பு உள்ளது. இப்போது சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்தையும் அழைக்கலாம் என தகவல் சொன்னார்கள்.

த.வெ.க மாநாடுக்கு முன்பாக விஜயை அழைக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதற்கும் நான் இசைவு தெரிவித்திருந்தேன். திராவிடத்தைப் பற்றி நிலைப்பாடு என்ன என்று கேட்கிறீர்கள். திராவிடத்தைப் பற்றி ஏற்கெனவே கருத்து சொல்லி உள்ளேன். திராவிடர் என்பது தமிழக அரசியல் என்பது பல பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இது தவறு. திராவிடத்தால் வீழ்ந்தோம் என சொல்வதை விட வாழ்ந்தோம்… வரலாறுப் படைத்தோம் என்பதுதான் முக்கியமான அரசியல் விஜய் வீசிய அணுகுண்டு அவருக்கு எதிராகவே வெடிக்கும்.

சாதியம்தான் நம்மை பிளவுபடுத்தி, வீழ்த்தியுள்ளது. அதனை எதிர்க்க வேண்டும் என்றால் ஆரியத்தை எதிர்க்க வேண்டும். அதிலிருந்து முற்றாக மாற்றம் செய்ய வேண்டும். திராவிடம் என்பது கருத்தியல் நிலப்பரப்பை குறிப்பது அல்ல. அது ஒற்றை மொழி அல்ல. தேசிய இனம் என்று சொல்ல முடியாது. நிலமாகவும் இல்லை. கற்பனை செய்து கொண்டு அதன் நிலப்பரப்பு எல்லை என்று சொல்வது கற்பனை வாதம். திராவிடம் என்பது கருத்துகள் சாதியத்திற்கு எதிராக பேசிய அரசியல். பெரியாருக்கு முன்னதாகவே இந்த தமிழ் மண்ணில் திராவிடம் குறித்து பேசப்பட்டுள்ளது. சைவ எழுச்சி எழுந்த போது ஆரிய எதிர்ப்பு உண்டானது.

அப்போது திராவிடர் என்று சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திராவிடம் கருத்தியல் இல்லை என்றால் சனாதனம் நம்மை விழுங்கி இருக்கும். ஹிந்தி, தமிழை விழுங்கி இருக்கும். திராவிடம் என்ற பெரிய கருத்தியல் இல்லாமல் இருந்தால் சமஸ்கிருதம் தமிழை விழுங்கி இருக்கும். தமிழர் இனம் இருக்கிறோம் என்றால் அதற்கான பாதுகாப்பு காரணம் திராவிட கருத்தியல் தான்,என்றார்.

இதிலிருந்து திமுகவுடன் நான் கூட்டணி, இதிலிருந்து நான் பின்வாங்குவது இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: விஜயுடன் திருமாவளவன் கூட்டணி வைக்க மாட்டார். என்னிலும் முதிர்ந்தவர். அனுபவமும், அரசியல் அறிவும் பெற்றவர் திருமாவளவன். அவருடைய மாணவர்கள் தான் நாங்கள். நானே இவ்வளவு நிதானமாக இருக்கும் போது, எங்கள் அண்ணன் எவ்வளவு ஆழமா சிந்திப்பார் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர் அந்த தப்பை பண்ண மாட்டாரு. உறுதியாக சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எதுவும் கணக்கு போடக் கூடாது. நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் கூடினார்கள். விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியிருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.

இது குறித்து அரசியல் விமர்சர்கள் கூறியதாவது: ஆட்சியில் பங்கு கேட்டது, கள்ளச்சாராய எதிர்ப்பு மாநாடு நடத்தியது எல்லாம் நடிப்பு என்ற நிலையில் உள்ளது. கொள்கை பிடிப்பு என்ற பெயரில் திமுக கூட்டணியிலேயே திருமாவளவன் இருக்க நினைத்துள்ளார். ஏதோ சில சீட்டும் கைச்செலவுக்கு பணமும் கிடைப்பதால் அங்கே உள்ளார் என பலர் கூறுகின்றனர். விஜய் அதைவிட கொஞ்சம் கூடுதலாக கொடுப்பதாக சொன்னால் அம்பேத்கர்,பெரியார்,சமூக நீதி என்று கூவிவிட்டு அங்கே செல்வார். ஆனால் சீமானோடு மட்டும் கூட்டணி வைக்க மாட்டார். சீமான் ஒன்றும் தர மாட்டார்.
பிஜேபி அதைவிட அதிகம் தந்தால் அங்கே போகவும் தயங்காத வீரமுள்ள தன்மானமிக்க தமிழனிடம் வீண் விளையாட்டு வேண்டாம்.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னொரு மக்கள் நல கூட்டணி உருவாகலாம். சீமான், விஜய், திருமா, பிரேமலதா ஒரு அணியாகவும், இன்னொன்று பாமக, பாஜக, ஓ பி எஸ், வாசன், கிருஷ்ணசாமி, ttv தினகரன், பாரிவேந்தன், ஜான் பாண்டியன் ஒரு அணியாகவும் மாறலாம்.திமுக கூட்டணி யை மீண்டும் ஸ்டாலின் கட்டமைத்து விடுவார். திருமா மட்டும் போயிடுவார். அதனால பெரிய நட்டம் எதுமில்லை. அதிமுகதான் அம்போ ன்னு நிக்கிறது. அதிமுக வின் 26% வாக்கு வங்கி யில் ஏற்கனவே 5-6% போயிடுச்சு. இன்னொரு 7-8% போயிடும்.

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்,விடுதலை சிறுத்தை போன்றகட்சிகள் தி மு க கூண்டில் அடைபட்ட பறவைபோல் உள்ளன. வெளியில் வந்தால் சுதந்திர பறவைகள். கூண்டிற்குள் அவைகள் கத்திக்கொண்டு இருக்கும். இதுதான் அரசியல் வேடிக்கை. இதை மக்கள் ரசிக்கிறார்கள். திருமா, சீமான் னோட அண்ணனா… விஜய் சீமான் னோட தம்பியா.. அப்ப திருமா வுக்கு விஜய் யாரு… சீமான் கும்பல், திருமாவோட மாணவர்களா. புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்கு இன்றைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து நாங்கள் முடிவெடுப்போம் என்று திருமாவளவன் கூறுவது உள்நோக்கம் உடையது என்பது யாரும் அறியாதவர்கள் அல்ல. திருமா திமுக அணியிலிருந்து விலகி பிஜேபி அல்லது அதிமுக, விஜய் கூட்டணியில் சேர்வது அவரது கட்சிக்கு நல்லது. ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா பண்ணிய வேலையால், திமுக சிறுத்தையை எலியாக்க திட்டம் போட்டுள்ளது.

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த கொலைகார ராஜபக்சா அளித்த விருந்துக்கு நன்றி தெரிவித்து வந்தவர் என்ற குற்றச்சாட்டு திருமால் மீது இன்னும் மாறவே இல்லை. திமுகவின் ராஜதந்திர வேலைகள் திருமாவுக்கு புரியாமல் உள்ளது. சீரும் சிறுத்தையை சீரழித்து விரைவில் பூனையாக மாற்றி விடுவார்கள். அரசியலில் எல்லாருமே திருடர்கள் தான் நம்ம நாட்டில், இது என்ன கொள்கை கொடி பறக்க வேண்டும் என்பது திருமாவுக்கு தெரியாமல் இல்லை.

புத்தன் போதனையில் குத்தமில்லை… அவன் போதி மரத்தில் உள்ள ரத்த கரைதான் இன்னும் மாறவில்லை. இந்த திமுகவை பல தேர்தல்களில் திருமாவளவன் தாக்கி பேசியுள்ளார். திருமாவின் இந்த முடிவு நிரந்தரமானதா… இல்லை தேர்தல் அறிவிப்பு வரும் வரை தந்திரமானதா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

  • Aishwarya Rajesh Pushed away Meenakshi Chaudhary மேடையில் பிரபல நடிகையை தள்ளி விட்டு நடிகருடன் நெருக்கம் காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் : வைரல் வீடியோ!
  • Views: - 199

    0

    0