இதுதான் மக்களுக்கு கொடுக்கற பரிசா? பிறந்தநாளில் கொந்தளித்த இபிஎஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்!!

இதுதான் மக்களுக்கு கொடுக்கற பரிசா? பிறந்தநாளில் கொந்தளித்த இபிஎஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்!!

தமிழ் நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டு மக்களுக்கு சோதனையான காலமாகவே இருந்து வருகிறது.

விடியல் தரப்போகிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த திரு. ஸ்டாலின் அவர்களின் ஆட்சி ஒரு இருண்ட ஆட்சியாகவே இருக்கிறதென்று சொன்னால் அது மிகையாகாது. திரும்பிய துறைகளில் எல்லாம் நிர்வாகத் திறமையற்று மக்கள் தலையில் பேரிடியாய் வாய்த்திருக்கின்ற இந்த விடியா அரசு, தனது மூன்றாண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழ் நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

தமிழ் நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டு மக்களுக்கு சோதனையான காலமாகவே இருந்து வருகிறது. விடியல் தரப்போகிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த திரு. ஸ்டாலின் அவர்களின் ஆட்சி ஒரு இருண்ட ஆட்சியாகவே இருக்கிறதென்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் படிக்க: அமைச்சர் எ.வ. வேலு மகன் கார் விபத்தில் சிக்கினார்.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

திரும்பிய துறைகளில் எல்லாம் நிர்வாகத் திறமையற்று மக்கள் தலையில் பேரிடியாய் வாய்த்திருக்கின்ற இந்த விடியா அரசு, தனது மூன்றாண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழ் நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

8.5.2024 அன்று தேதியிட்ட அரசு அறிவிக்கையின்படி, 3.5.2024 முதல் தத்து ஆவணங்கள், ஒப்பந்த ஆவணங்கள், ரத்துப் பத்திரங்கள், நகல் பத்திரங்கள், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணங்களை 10 மடங்கு முதல் 33 மடங்கு வரை உயர்த்தியுள்ளது நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசு. இருக்கின்ற நிதியை சரிவர மேலாண்மை செய்து, புதிதாக வாங்கும் கடன்களை மூலதனச் செலவுகளாகவும், மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடு செய்வதே நல்ல அரசின் இலக்கணம்.

அதன்படி செவ்வனே செயல்பட்ட மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும், எனது தலைமையிலான அம்மாவின் அரசும் மக்கள் மீது சுமைகளை பெரிதும் ஏற்றாமல், பொருளாதாரத்தை உரிய குறியீடுகளுக்குள் சரிவர நிர்வகித்து வந்தது. ஆனால், கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட திரு. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விடியா திமுக அரசு, அனைத்துத் துறைகளையும் முறைகேடுகளால் சீர்குலைத்து, மாநிலத்தின் நிதிநிலைமையை நிலைகுலையச் செய்து, தன் தவறுகளால் ஏற்படும் பாரத்தை, வரி மற்றும் கட்டண உயர்வுகள் மூலம் மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றுவது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கெனவே, விடியா தி.மு.க. அரசு கொண்டுவந்த வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை இதுவரை இந்த விடியா தி.மு.க. அரசு அமல்படுத்தவில்லை.

உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இதுவரை தடையாணை தரவில்லை. எனவே, எவ்வித நியாயமும் இன்றி பல மடங்கு முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும் என்றும் திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

4 minutes ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

7 minutes ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

53 minutes ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 hour ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 hour ago

This website uses cookies.