உதயநிதி துணை முதலமைச்சராகிறாரா? எதிர்பார்த்ததை எதிர்பாருங்கள்.. அமைச்சர் டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
29 ஆகஸ்ட் 2024, 1:43 மணி
Moorthyy'
Quick Share

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட அளவிலான கல்விக் கடன் சிறப்பு முகம் இன்று நடைபெற்றது

அமைச்சர் மூர்த்தி அவர்கள் முகாமை தொடங்கி வைத்து 134 மாணவ மாணவியர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தசக்திவேல் அவர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பிரசாந்த் துக்காராம் நாயக் அவர்கள், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் பியுலா ஜெயஸ்ரீ அவர்கள் உட்பட பல்வேறு முன்னணி வங்கிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர் கூறும் போது வரி எய்ப்பு செய்பவர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வே எடுத்து தொழில் வரி ஏய்ப்பு செய்வர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கிறோம். போலியாக, தொழில் செய்வதாக சான்று வைத்துக்கொண்டு தொழில் செய்யாதவர்களை கண்டறிந்து வருகிறோம்.

கடந்த ஆண்டை விட 4000கோடி அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிக வரித்துறையில் 1,42ஆயிரம் கோடி இலக்கு வைத்துள்ளோம். நியாயமாக நேர்மையாக தொழில் செய்ய வேண்டும்.

பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டியை அரசுக்கு நேர்மையான முறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணைமுதலமைச்சர்…. எதிர்பாருங்கள் என பதிலளித்தார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 176

    0

    0