இஸ்லாமிய நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி…. மனிதநேயத்தை வலியுறுத்தும் விழா – அண்ணாமலை வாழ்த்து

Author: Babu Lakshmanan
18 September 2023, 11:34 am

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- கோலஞ்சை துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா…என்று அவ்வை பிராட்டி உருகி வேண்டிய விநாயகப் பெருமானின் திருவடிகளை வணங்கித்தான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குகிறோம்.

சுதந்திரப் போராட்டம் எழுச்சி பெறவும், மக்களை ஒன்று திரட்டவும், பாலகங்காதர திலகர் அவர்களால் மராட்டிய மாநிலத்தில் தொடங்கப்பட்ட கணேஷ் சதுர்த்தி திருவிழாக்கள் மிகப் பிரபலமாக, மதங்களைக் கடந்த மனிதநேயத்திற்கும் ஒற்றுமைக்கும் சான்றாக இன்றும் விளங்குகிறது. விநாயகர் வழிபாடு இந்திய நாட்டைக் கடந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள அனைத்து நாடுகளிலும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவின் பணத்தாளிலும் விநாயகர் பெருமானின் திருவுருவம் அச்சிடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டின் திருவிழாக்களின் தொடக்கமாக அமைந்திருக்கும் விநாயகர் சதுர்த்தியான இன்று நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று மனநிறைவோடு, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கணபதி நாதரை தொழுது வணங்கி வாழ்த்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?