அன்று முத்தலாக்… இன்று ஹிஜாப்… இஸ்லாமிய தனி சட்டத்தில் மூக்கை நுழைக்கும் பாஜக : அகில இந்திய இமாம் கவுன்சில் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
15 March 2022, 8:19 pm

திருச்சி : கர்நாடகாவின் ஹிஜாப் தொடர்பான தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அகில இந்திய இமாம் கவுன்சில் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான தீர்ப்பானது இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வெளியானது. அதில் ஹிஜாப் அணிவதற்கு ஏற்கனவே இருந்த தடைச்சட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அகில இந்திய இமாம் கவுன்சிலின் செய்தியாளர் சந்திப்பின் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநில தலைவர் கூறியிருப்பதாவது :- ஹிஜாப் தொடர்பான கர்நாடகாவின் தீர்ப்பை பார்க்கும் போது நீதிமன்றம் ஹிஜாப் குறித்த ஒரு பிரச்சனையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு மாற்றாக மார்க்க அறிஞர்களை போல தீர்ப்பை வழங்கியிருப்பது கவலையும் அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது. ஷரியத் சட்டத்தை தான் உலகம் முழுதும் உள்ள இந்திய இஸ்லாமியர் உட்பட பின்பற்றி வாழ்கின்றனர்.

ஹிஜாபை ஷரியத் சட்டப்படி இஸ்லாமியர்கள் பின்பற்றி வருகின்றனர். கர்நாடகா உயர்நீதிமன்றம் திருக்குரான் அடிப்படையான சட்டம் இல்லை. இஸ்லாமிய சட்டம் இல்லை என கூறி இருப்பது வேதனை அளிக்கிறது. இது அநீதியான தீர்ப்பாக அகில இந்திய இமாம் கவுன்சில் கருதுகிறது. அரசியல் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பாக இமாம் கவுன்சில் பார்க்கிறது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யும். ஜனநாயக சக்திகளை இணைத்து ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபடும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வந்த நாள் முதல் சிறுபான்மையர் மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக இஸ்லாமியருக்கு எதிராக செயல் படுகிறார்கள் என பார்க்க முடிகிறது. தேச முழுவதும் வெறுப்பு அரசியல், கும்பல் படுகொலைகள் பாரதிய ஜனதா முன்னெடுக்கிறது. இஸ்லாமிய தனி சட்டத்தில் மூக்கை நுழைத்து முத்தலாக் சட்டத்தில் கை வைத்து அதனை அமல்படுத்தினார்கள். ஷரியத் சட்டத்தில் கைவைத்து பழிவாங்கும் போக்கோடு செயல்பட்டு வருகிறது இதை பாஜகதான் நிறுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1578

    0

    0