குஜராத் மாநிலத்தால் தான் போதைப் பொருள் அதிகமாக பரவுகிறது : அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 7:01 pm

போதைப்பொருட்கள் அதிகளவு வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிகளவு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆப்கனில் இருந்து ஈரான் வழியாக குஜராத்திற்கு அதிகளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் தான் அதிகளவு போதைப்பொருட்கள் கடத்தல் நடக்கிறது. போதைப்பொருட்கள் அதிகம் விற்பனையாகும் மாநிலம் குஜராத் தான்.

போதைப்பொருட்கள் இந்தளவு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம். வெளிநாடுகளில் இருந்து தான் அதிகளவு போதைபொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. துறைமுகங்களை தனியார் மயமாக்கியதால் போதைப்பொருட்கள் கடத்தல் நடக்கிறது. இவ்வாறு பொன்முடி கூறினார்.

  • Selvaraghavan Viral Video உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!