விஜய் கட்சி போட்டிக்கு வருவதால் பயப்பட வேண்டியது பாஜக அல்ல… ஹெச் ராஜா அதிரடி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2024, 2:07 pm

மதுரையில் பாஜக மூத்த தலைவரும், தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளருமான ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “ராகுல் காந்தி அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான நபர்களை சந்தித்து பேசி உள்ளார்.

இந்தியாவில் உள்ள பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வேன் என பேசி உள்ளார்.

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான சீக்கிய சமுதாய மக்களை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது.

ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து சாதி, மத கலவரங்களை உண்டாக்கி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார், ராகுல் காந்தி இந்தியாவுக்கே எதிரி போல செயல்படுகிறார்.

இந்தியா குறித்து மிக தவறான கருத்துக்களை ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசி உள்ளார், ராகுல் காந்தியின் செயல்பாடுகள் தேச விரோத செயலாகும், இந்தியா முழுதும் 16,000 பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,

இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு 4,000 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி தர வேண்டும், திட்டத்தின் விதிகளின் படி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும்.

முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து பிடிவாதம் செய்கிறது, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குடும்ப பிள்ளைகளுக்கு மும்மொழி வேண்டும், தமிழக மக்களின் பிள்ளைகளுக்கு இருமொழி கற்றுக் கொடுக்கிறார்கள்.

1985 ஆம் ஆண்டு ராஜுவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார், தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது, தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மறுநாள் காலை மத்திய அரசின் கல்வி நிதி வந்தடையும்.

நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமல்படுத்தப்பட்டது. நீட் விலக்கு வேண்டுமானால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ₹20 லட்சம் கொடுங்க… திமுக அரசுக்கு DEMAND வைத்த செல்லூர் ராஜூ!

பாஜக மது அருந்ததாத உறுப்பினர்களை கொண்ட கட்சி என்பதால் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என திருமாவளவன் நினைத்து இருக்கலாம்.

மகாவிஷ்ணு எந்தவொரு தவறும் செய்யவில்லை, மகாவிஷ்னுவை மிரட்டும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளி மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

விஜய்யின் கொள்கை என்பது நீட்டை எதிர்ப்பது, கல்வியை பொது பட்டியலுக்கு கொண்டு வருவதாகும், ஆகவே விஜய் திராவிட கட்சிகளுக்கு தான் போட்டியாளராக இருப்பார்.

விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவிற்கு பாதிப்பில்லை, திராவிட கட்சிகளின் வாக்கை தான் விஜய் பிரிப்பார்” என கூறினார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!