கொண்டாட வேண்டாங்க… ஆனா முதல்வர் பொறுப்பில் இருந்துவிட்டு ஒரு வாழ்த்து சொல்லாமல் இருப்பது தவறு : எல்.முருகன்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2022, 12:27 pm

சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அவர் விருப்பம். ஆனால் முதல்வராக இருப்பவர் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.

இது குறித்து சென்னையில் மத்திய இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனைத்து திருவிழாக்களுக்கும், அனைத்து பண்டிகைகளுக்கும் முதல்வராக இருப்பவர் வாழ்த்து தெரிவிக்கவேண்டும்.

திமுக தலவைராக ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அவர் விருப்பம். முதல்வராக இருப்பவர் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழகத்தில் சிறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம்.

நாட்டின் வளர்ச்சி பாதை மென்மேலும் உயர வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu