செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை உயிர் பிழைக்க வைக்க இப்படி செய்வது தவறு : அண்ணாமலை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 10:21 am

ஆட்சி கட்டிலில் அமர்ந்தது முதல் திமுக அரசுக்கும்- பாஜகவிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை வருகிற ஏப்ரல் 14ஆம் தேதிவெளியிட இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழக மக்களுக்காக ஆளுநர் ரவி சேவை செய்து வருகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி நேரில் சந்தித்து கட்சியின் சார்பாகவும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்றதாக கூறினார்.

பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ராகுல் காந்தி பதவி நீக்கத்திற்காக பாஜக அலுவலகம் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறினார்.

இறந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை உயிர் பிழைக்க வைப்பதற்கு, பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை தாக்கினால் தான் அந்த கட்சி உயிர் பிழைக்கும் என்று யாரோ தவறாக தெரிவித்து இருப்பதாக விமர்சித்தார்.

4 பேர், 5 பேர் என கடந்த 10 நாட்களாக பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் தாக்கி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினரை விட பாஜக அலுவலக பாதுகாப்பில் காவல்துறையினர் அதிகளவில் இருப்பதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் இது போன்ற செயல் காமெடியாக இருப்பதாக கூறிய அவர், காங்கிரஸ் கட்சி பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு தான் தமிழகத்தில் வளர வேண்டிய நிலை உள்ளதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.

  • samantha talks about said not to junk food advertisement 20 வயசுல பண்ண தப்பு; கோடிக்கணக்கான பணம் போயிடுச்சு- ஓபனாக  பேசிய சமந்தா!