அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரருக்கு அடுத்த ஸ்கெட்ச்… ஐ.டி. வளையத்திற்குள் புதிய நவீன சொகுசு பங்களா… கரூரில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
11 January 2024, 10:36 am

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறையின் மதிப்பீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் 200 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்கும்படி அவர் மனு தாக்கல் செய்து வந்தாலும், அவரது நீதிமன்ற காவல் பல முறை நீட்டிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கரூரில் பல கோடி மதிப்பிலான புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். இந்த நிலையில், அசோக் வீட்டில் வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அசோக் கட்டி வரும் புதிய வீட்டின் மதிப்பு, பரப்பளவு, கட்டுமான செலவுகள் குறித்து மதிப்பிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அசோக் ஆஜராகாமல் இருந்து வருகிறார். தற்போது, அவரது சொகுசு பங்களா வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குள் வந்திருப்பதால், அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 405

    0

    0