நீட் தேர்வை முன்கூட்டியே எதிர்த்தது திமுக தான் : பல்வேறு மொழிகளில் வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2024, 5:11 pm
CM stalin
Quick Share

நீட் தேர்வை முன்கூட்டியே எதிர்த்தது திமுக தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நீட் ஆபத்தை முதலில் முன்னறிவித்து அதற்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது திமுக தான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தோம்.

ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின்படி நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம். ஆளுநர் தரப்பில் அதிக காலதாமதத்திற்கு பிறகு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது.

மேலும் படிக்க: தோல்விக்கு பொறுப்பேற்பு? ஆறே மாதத்தில் அரசியலில் இருந்து விலகிய விகே பாண்டியன்!

நீட் தேர்வு முரண்பாடுகளால் நாடு தழுவிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம். தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 148

0

0