எங்கேயோ இடிக்குது… முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரை : செக் வைத்த ஆளுநர்!!
Author: Udayachandran RadhaKrishnan16 June 2023, 6:52 pm
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவிரி மருத்துவமனைக்கு நேற்று இரவு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி பதவி வகித்து வந்த மின்சாரத்துறை தற்பொழுது நிதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவிற்குக் கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையைத் தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியது. அந்த பரிந்துரை புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆளுநர் மாளிகையில் இருந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் முதலமைச்சர் பரிந்துரையின் படி செந்தில் பாலாஜி வகித்து வந்த இரு துறைகள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும், மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிற்கும் கூடுதல் துறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் அவர் அமைச்சராகத் தொடர ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை என்பது இந்த உத்தரவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலாகாக்கள் மாற்றம் தொடர்பான பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர மறுப்பு தெரிவித்துள்ளார்.
0
0